சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தமிழில் பிரசன்னா - லேகா வாஷிங்டன் நடிப்பில் வெளியான படம் கல்யாண சமையல் சாதம். அறிமுக இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியிருந்தார். இப்படம் ஹிந்தியில் சுப மங்கல் சவுதான் என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.பிரசன்னாவே இயக்க, ஆயுஸ்மான் குரானா, பூமி பத்னேகர் ஹீரோ-ஹீரோயின்களாக நடித்திருக்கின்றனர். பிரபல இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
அப்போது பேசிய ஆனந்த் எல்.ராய்... "சுப மங்கல் சவுதான் படத்தில் ஆபாசமான காட்சிகள் எதுவும் இருக்காது. அனைத்து தரப்பினரும், குடும்பத்தோடு வந்து ரசிக்கும் படியான படமாக இருக்க வேண்டும் என்று எங்கள் குழு மிகவும் கவனமாக இருந்தது. படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் போன்று எதுவும் கிடையாது. படம் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் ரசித்து பார்ப்பார்கள்" என்று கூறியுள்ளார்.
சுப மங்கல் சவுதான் படம் வருகிற செப்., 1-ம் தேதி ரிலீஸாக உள்ளது.