ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
2014ல் வெளிவந்த 'அன்னபேளே' திரைப்படம் உலகளவில் கிட்டத்தட்ட 257 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது. இப்போது வெளிவரவிருக்கும் அதன் இரண்டாம் பாகமான 'அன்னபேளே : கிரியேஷன்' திரைப்படத்தை 'தி கான்ஜுரிங்' படத்தை இணைந்து தயாரித்த பீட்டர் சப்ரான் மற்றும் ஜேம்ஸ் வான் தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தில், ஸ்டெப்னி சிக்மேன் (ஸ்பெக்டர்), தலித்தா பேட்மேன் (தி 5த் வேவ்), லுலு வில்சன் (ஓஜா 2, டெலிவர் அஸ் ஃப்ரம் ஈவில்), பிலிப்பா கவுல்தர்டு (ஆஃப்டர் தி டார்க்), கிரேஸ் ஃபல்டன் (பேட்லேன்ட்), லோ லோ சஃப்ரான் (தி சாய்ஸ்), சமரா லீ (ஃபாக்ஸ்கேட்சர், தி லாஸ்ட் விட்ச் ஹன்ட்டர்) மற்றும் அறிமுகம் டெய்லர் பக் ஆகியோருடன் அந்தோணி லாபக்லியா (வித்அவுட் ட்ரேஸ் : டிவி ஷோ), மிராண்டா ஓட்டோ (ஹோம்லேன்ட், தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் தொடர்) ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒரு சின்னக் குழந்தை இறந்து பல வருடங்களுக்குப்பிறகு, அந்த குழந்தையின் பெற்றோர் ஒரு ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து ஒரு கன்னியாஸ்திரியையும் சில பெண் குழந்தைகளையும் தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள் பொம்மைகள் செய்யும் அந்த பெற்றோர் அனபேள் என்ற அழகாக பொம்மை செய்கிறார்கள். அந்த பொம்மைக்குள் இறந்த குழந்தையின் ஆவி புகுந்து கொள்ள அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படம்.
இந்தப் படத்தை அதே பெயரில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் 4 மொழிகளில் வெளியிடுகிறது வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம்.