ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் 'ஸ்பைடர்' படம் செப்டம்பர் மாதம் 27ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் முதல் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளார்கள். படத்தின் டைட்டில் பாடலான 'பூம் பூம்' என்ற அந்தப் பாடலை நிகிதா பாடியுள்ளார். இதன் சிறு வீடியோ முன்னோட்டத்தை நேற்று வெளியிட்டார்கள். அதில் மிகவும் ஸ்டைலிஷான மகேஷ் பாபுவின் தோற்றம் அவருடைய ரசிகர்களை மிகவும் கவர்ந்துவிட்டது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக நடிக்கும் மகேஷ் பாபுவிற்கு இந்தப் படம் தமிழில் நேரடி அறிமுகப் படம். அது மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அவரை வேறு ஒரு தளத்திற்கு இந்தப் படம் கொண்டு செல்லும் என அவருடைய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்த, சென்னையில் பிறந்து, வளர்ந்து, படித்த மகேஷ் பாபுவின் தமிழ்த் திரையுலக வருகை இங்குள்ள நடிகர்களுக்கு எந்த அளவிற்குப் போட்டியாக இருக்கும் என்பது படத்தின் டீசரிலேயே தெரிந்துவிட்டது.
அஜித், விஜய், சூர்யா ஆகியோருக்கு மிகப் பெரும் திருப்புமுனையான படங்களைக் கொடுத்த முருகதாஸ் மகேஷ் பாபுவுக்கு தெலுங்கில் பெரிய திருப்புமுனையாவும், தமிழில் சிறந்த அறிமுகமாகவும் கொடுப்பார் என்பது திரையுலகத்தில் உள்ளவர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.