ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆர்யா நடிகராக மட்டுமல்லாமல் சைக்கிள் வீரராகவும் இருக்கிறார். தினமும் பல கிலோ மீட்டர்களுக்கு சைக்கிளிங் செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் ஆர்யா, சில போட்டிகளிலும் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் புகழ் பெற்ற சைக்கிள் போட்டியான லண்டன் - எடின்பர்க்- லண்டன் 2017 போட்டியில் நேற்று முதல் கலந்து கொண்டுள்ளார். லண்டனில் ஆரம்பமாகும் இந்தப் போட்டி எடின்பர்க் நகர் வரை சென்று மீண்டும் லண்டன் திரும்பும் 1400 கிலோ மீட்டர் தூரப் போட்டியாகும். மொத்தம் 5 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியல் 1500க்கும் மேற்பட்ட சைக்கிள் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஆர்யா இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கு '2.0' படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா உதவி செய்கிறது. போட்டியில் அவர் '2.0' ஜெர்சி அணிந்து கொண்டு போட்டியில் கலந்து கொண்டுள்ளார். படத்தின் அடுத்த கட்ட பிரமோஷன் ஆக இது நடக்கிறது. இதற்கு முன் ஹாலிவுட்டில் ராட்சத பலூனைப் பறக்க விட்டார்கள். இப்போது ஆர்யாவுக்கு ஸ்பான்சர் செய்து இங்கிலாந்தில் பிரமோஷன் செய்கிறார்கள்.
ஆர்யாவும் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்தப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 'தலைவர் ரஜினி மற்றும் அக்ஷய் குமார் ஆசியுடன் இந்தப் போட்டியில் கலந்து கொள்கிறேன். ஆதரவுக்கு நன்றி,” என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு பெரிய நடிகரின் படத்திற்கு மற்றுமொரு நடிகர் இப்படி சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு விளம்பரப்படுத்துவது இதுவே முதல் முறை.