ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2017ம் ஆண்டு ஆரம்பமானதிலிருந்து கடந்த ஏழு மாதங்களாக வெளிவந்த படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்த ஆண்டில் இதுவரை சொல்லிக் கொள்ளும்படியான ஒரு பெரிய வெற்றி தமிழ்ப் படங்களுக்குக் கிடைக்கவில்லை. 'பாகுபலி 2' படம் மட்டுமே வரலாற்று வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தமிழ்ப் படத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கருத முடியாது. அவர்கள் சொன்னாலும், சொல்லவில்லை என்றாலும் 'பாகுபலி 2' படத்தில் பெரும்பாலான காட்சிகள் தெலுங்கு உதட்டசைவுடன் இருந்தது என்பதுதான் உண்மை. அந்தப் படத்தைத் தவிர இந்த ஏழு மாதங்களில் வெளிவந்த நேரடித் தமிழ்ப் படங்கள் சுமாருக்கும் கீழான வெற்றியைத்தான் பெற்றுள்ளது. லாபம் என்று சொல்லும்படி ஒரு படம் கூட இல்லை என்பதே கசப்பான உண்மை.
ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குப் பின் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. தியேட்டர்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. அதற்கு டிக்கெட் கட்டணங்களும் ஒரு காரணம், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியும் கூட ஒரு காரணம். சனி, ஞாயிறுகளில் மட்டுமாவது தியேட்டர்கள் ஹவுஸ்புல்லானதை பிக் பாஸ் நிகழ்ச்சி கெடுத்துவிட்டது என தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
இப்படி பல விதத்தில் தடுமாறிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கான இந்த ஆண்டின் வரவேற்பு 'விவேகம்' படம் வந்த பிறகு மாறும் என திரையுலகத்தினர் பலரும் ஒரு எதிர்பார்ப்புடன், நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். மக்களை, மற்ற விஷயங்களை மறக்க வைத்து தியேட்டர் பக்கம் வரவழைக்கும் சக்தி, 'விவேகம்' படத்திற்கு இருக்கிறது என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
இன்னும் சில நாட்களில் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ள 'விவேகம்' படம் அனைவரின் நம்பிக்கையையும் காப்பாற்றுமா என்பது இயக்குனர் சிவா, அஜித்தின் கையில் உள்ளது. மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்தக் கூட்டணி தமிழ்த் திரையுலகத்தின் தற்போதைய தடுமாற்றத்தைத் திருப்பிப் போடுமா ?.