காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
இயக்குநர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விக்ரமன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முரளியை விட 1532 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
துணைத் தலைவர் பதவிகளுக்கு புது வசந்தம் அணி சார்பாக போட்டியிட்ட ஆர்.வி.உதயகுமார் மற்றும் கே.எஸ். ரவிகுமார் வெற்றி பெற்றுள்ளனர். புதிய அலைகள் அணி சார்பாக பேட்டியிட்ட சுப்புரமணிய சிவா தோல்வி அடைந்துள்ளார். கே.எஸ். ரவிகுமார் 1276+33 தபால் ஓட்டுக்கள் பெற்று மொத்தம் 1309 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆர்.வி.உதயகுமார் 1065+30 மொத்தம் 1095 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுப்புரமணிய சிவா 537+7 ஓட்டுக்கள் பெற்று தோல்வி அடைந்தார்.
புது வசந்தம் அணியின் சார்பாக பொருளாராக போட்டியிட்டு 1075 வாக்குகள் பெற்று பேரரசு வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட புதிய அலைகள் அணியின் ஜெகதீசன் 452 வாக்குகள் பெற்றுள்ளார்.