ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
டிஜிட்டல் தளத்தை தமிழ்த் திரையுலகத்தினரை விட வேறு யாரும் சிறப்பாகப் பயன்படுத்துவதில்லை என தாராளமாகச் சொல்லலாம். அதிக வியாபாரம், அதிக ஏரியாக்களை வைத்துள்ள தெலுங்கு, இந்தித் திரையுலகத்தில் நிகழ்த்தப்படும் டிஜிட்டல் தள சாதனைகளை விட தமிழ்ப் படங்கள் நிகழ்த்தும் சாதனைகள் அதிகம்தான்.
தமிழ்த் திரையுலகினர் மொத்த பேரையும் டிஜிட்டல் யுகம் நோக்கி திரும்ப வைத்த பெருமை 2011ம் ஆண்டு யு டியூபில் வெளியான 'ஒய் திஸ் கொலவெறி' பாடலுக்கு உண்டு. அந்தப் பாடலுக்குப் பிறகு வேறு எந்த பாடலும் வைரலாகப் பரவவில்லை. இப்போது 'வைரல்' எனப் பலர் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு உண்மையில் அர்த்தமாக அமைந்தது 'கொல வெறி' பாடல் மட்டுமே.
உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த பாடல். யு டியுபில் இதுவரை 12 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பாடலைப் பார்த்துள்ளனர். தமிழ்ப் பாடல்களில் யு டியூபில் முதன்மையான இடத்தை கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக பிடித்துக் கொண்டிருக்கும் இந்தப் பாடல் மற்றுமொரு சாதனையாக 6 லட்சம் லைக்குகளைக் கடந்துள்ளது. வேறு எந்த டிரைலர், டீசருக்கும், வீடியோவிற்கும் தமிழில் 6 லட்சம் லைக்குகள் கிடைக்கவில்லை. இந்த சாதனையை முதன் முறையாக 'கொல வெறி' பாடல் சுமார் 6 ஆண்டுகள் கழித்து படைத்திருக்கிறது.
இருந்தாலும் அந்த சாதனையை 'விவேகம்' டீசர் விரைவில் முறியடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த மே மாதம் வெளியான விவேகம் டீசரை இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். இன்னும் 84 ஆயிரம் பேர் லைக் செய்தால் 'கொல வெறி' லைக் சாதனையை 'விவேகம்' டீசர் முறியடித்துவிடும் வாய்ப்பு உள்ளது.
லைக் சாதனையை முறியடித்தாலும் 'கொல வெறி' பாடலின் 6 வருட சாதனையை இன்னும் வேறு எந்தப் பாடலாலும் முறியடிக்க முடியாமலே உள்ளது.