ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தும் பின் 2 படத்தின் தோல்விக்கு பிறகு, முல்க் என்ற படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார், டைரக்டர் அனுபவ் சின்ஹா. இப்படத்தில் ரிஷி கபூர், பிரதிக் பாபர், டாப்ஸி பன்னு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். முல்க், உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட சமூகம் சார்ந்த த்ரில்லர் படமாம். ஒரு சிறிய நகரில் வசிக்கும் கூட்டுக் குடும்பத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது தான் இப்படத்தின் கதையாம்.
அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் சர்ச்சை ஒன்றில் சிக்கி, அதிலிருந்து தங்கள் குடும்ப கவுரவத்தை மீட்டெடுப்பது தான் படத்தின் கதை. இப்படத்தில் ரிஷி கபூரின் மருமகளாக டாப்சி நடித்துள்ளாராம். இப்படத்தின் சூட்டிங் வரும் அக்டோபர் மாதம் துவங்க உள்ளதாம். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் வாரணாசி மற்றும் லக்னோவில் நடத்தப்பட உள்ளதாம்.