Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்தை இயக்க ஆசை... : சவுந்தர்யாவின் டார்கெட்

30 ஜூலை, 2017 - 10:40 IST
எழுத்தின் அளவு:
soundarya-rajinikanth-likes-to-make-film-with-Ajith

ரஜினி மகள் சவுந்தர்யா கோச்சடையான் படத்தில் தந்தையையே இயக்கியவர். தற்போது தனுஷ், அமலாபால் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் (வி.ஐ.பி. 2) இயக்கிய குஷியில் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்த தருணம்...


வி.ஐ.பி. 2 எப்படி வந்துள்ளது?
ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. என்னால் முடிந்தவரை சிறப்பாக செய்திருக்கிறேன். தனுஷ் மற்றும் கஜோல் இரண்டு முக்கிய நடிகர்களை வைத்து இயக்கியதில் பெருமையடைகிறேன். படம் வெளியீட்டை மிகவும் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளேன்.

வி.ஐ.பி. 1, வி.ஐ.பி. 2 இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
வி.ஐ.பி. 1 மிகவும் எளிமையான கதை. ரகுவரன் வாழ்க்கை போராட்டத்தை கூறியிருந்தார்கள். வி.ஐ.பி. 2-வில் ரகுவரன் அடுத்த கட்டத்திற்கு செல்லும் வாழ்க்கையை கூறியிருக்கிறோம். அவர் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். படத்தில் முக்கிய ‛மெசேஜ்' உண்டு. அந்த லூனா வண்டி, ஹரிபார்ட்டர் அனைத்தும் வி.ஐ.பி. 2-விலும் உண்டு.

தனுஷ் நடிகர் மட்டுமல்ல, ஒரு இயக்குனரும்கூட. அவரை இயக்கிய அனுபவம்?
தனுஷ் சிறந்த நடிகர். தொழில் மீது மிகுந்த பக்தி கொண்டவர். இந்த படத்தில் கதை, வசனம் எழுதி படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். கதை விவாதத்தின்போதே எனக்கும், அவருக்கும் சில விவாதங்கள் நடந்தது. கதை ஆசிரியராக எனக்கு விளக்கமளித்தார். அதுமட்டுமல்ல, இந்த படத்தில் தனுஷ் மட்டுமல்ல, சமுத்திரக்கனியும் இயக்குனர், ஒளிப்பதிவாளர் சமீரும் இயக்குனர். இவர்களுடன் பணியாற்றியதில் எல்லோரிடமும் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். தனுஷ் செட்டுக்கு வந்துவிட்டால், இயக்குனர் கூறுவதைதான் செய்வார். அதை மீறி செயல்படமாட்டார். அவருடன் தொடர்ந்து பல படங்களில் பணிபுரிய விரும்புகிறேன்.

அனிருத் - ஷான் ரோல்டன் இசை பற்றி கூறுங்கள்?
எனக்கு இசை குறித்து அவ்வளவாக தெரியாது. ஆனால் ஷான் கூட வேலைபார்த்த சில நாட்களிலேயே இசை பற்றி ஓரளவு தெரிந்து கொண்டேன். ஷான் மெலவுடில கலக்கிடுவார். இந்த படத்தின் மூலம் ஷான் வேற லெவலுக்கு செல்வார்னு கண்டிப்பாக நான் நம்புகிறேன். ஷான் - தனுஷ் காம்பினேஷன் சூப்பராக இருக்கு. பாடல்களை தனுஷ் எழுதியுள்ளார். ஒரு பாடல் ஷான் எழுதியுள்ளார். வி.ஐ.பி. 1ல் வேலையில்லா பட்டதாரி என தீம் சாங் அனிருத் இசையமைத்தது. இந்த படத்தில் அதை பயன்படுத்தியுள்ளோம்.

நடிகை கஜோலை ஏமாற்றி இந்த படத்திற்கு அழைத்து வந்தீர்களாமே?
கதை எழுதும்போதே வசுந்தரா பரமேஸ்வரன என்ற ரோலுக்கு கஜோல் தான் நடிக்கனும் என்று முடிவு செய்துவிட்டேன். மும்பை சென்று அவங்களிடம் கதை கூறினேன். கதை பிடித்ததால்தான் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தமிழ் படத்தில் நடிக்க ஒப்புககொண்டார்கள். இரண்டு ‛டயலாக்' மட்டும்தான் என்று கூறினோம், ஆனால் படத்தில் 4, 5 ‛டயலாக்' பேசும்படி உள்ளது. அதைதான் அவர்கள், பொய் சொல்லி அழைத்து வந்துவிட்டோம் என்று தமாஷாக கூறினார்கள். நான் ஆங்கிலத்தில் கூறுவதை அப்படியே உள்வாங்கி அந்த உணர்வோடு நடித்தார்கள். துணிச்சலான பெண் தொழிலதிபர் ரோலில் கலக்கிட்டாங்க.

பெண் இயக்குனர்களுக்கு இந்த துறையில் வாய்ப்புகளும், வரவேற்பும் எவ்வாறு உள்ளது?
பெண் இயக்குனர்கள் என்றால் பெண்களை முன்னிலைப்படுத்தும் கதைகள் மட்டுமே செய்வார்கள் என்ற தோற்றம் உளளது. அது மாறனும். எனக்கு இரண்டாவது படமே கமர்ஷியல் படமாக அமைந்ததில் மிகவும் சந்தோஷம். இந்த படத்தில் ஆக்சன், காதல், குடும்ப உறவு, காமெடி எல்லாமே உண்டு. என்னை போன்று நிறை பெண் இயக்குனர்கள் வர வேண்டுமென விரும்புகிறேன். என் டீமில் பெண்கள், உடைகள், ஆர்ட் டிபார்ட்மென்டில் மட்டும் இருப்பதை தவிர்த்து எல்லா பகுதிகளிலும் அவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளேன். இந்த துறைக்கு நிறைய பெண்கள் வரவேண்டும் என விரும்புகிறேன்.

அப்பா, அம்மா சப்போர்ட் உங்களுக்கு உள்ளதா?
படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு சென்றதும், இன்று எப்படி வேலை நடந்தது, என்ன காட்சி என்றொல்லாம் என் அப்பா விசாரிப்பார். அம்மா இல்லாம நான் ஒரு இயக்குனராக வேலைபார்க்க முடியாது. எனக்கு 2 வயதில் வேத் என்ற மகன் உள்ளான். அவனை பார்த்து கொள்வது அம்மாதான். என் அக்கா குழந்தைகள் யாத்ரா, லிங்கா, எனது மகன் என 3 பேரையம் பார்த்து கொண்டு, அவங்க நடத்தும் பள்ளியையும் கவனித்து கொண்டு, வீடு, அப்பா இப்படி எல்லா விஷயத்திலும் அம்மாவின் பங்கு மிகவும் முக்கியமாக உள்ளது. என் அம்மா பொறுமையின் சிகரம். எப்படி ஒருத்த்ர் இவ்வளவு பொறுமையாக இருக்க முடிகிறது என்று எனக்கு புரியல.

சூப்பர் ஸ்டார் குடும்பம் வீட்டில் எப்படி?
எல்லா குடும்பத்தையும் போல்தான் நாங்கள் வீட்டில் இருப்போம். சாதாரணமாக ஒருநாள் நீங்கள் வீட்டிற்கு வந்தீர்கள் என்றால் நாங்கள் எவ்வளவு எளிமையாக இருப்போம் என்பது உங்களுக்கே புரியும். சூப்பர் ஸ்டார் என்ற எந்த ஆடம்பரமும் வீட்டில் இருக்காது. எல்லோரும் மிகவும் சாதாரணமாகவே, இயல்பாகவே இருப்போம். எங்கள் உலகம் அப்பாதான். நானும், என் அக்காவும் அவர்கள் மகளாக பிறந்தது கடவுளின் ஆசீர்வாதம்.

அப்பா அரசியலுக்கு வர வேண்டுமென்று சிலர் விரும்புகிறார்களே?
அரசியல் பற்றி பேச வேண்டாம் என்று நினைத்தேன். எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமோ, அதை என் அப்பா சரியாக செய்திருக்கிறார். என் அப்பா எந்த முடிவு எடுத்தாலும், நாங்கள் அவருக்கு துணையாக இருப்போம்.

நீங்க பிரம்மாண்டமாக எடுத்த கோச்சடையான் படம் சரியாக போகவில்லை என்பதில் வருத்தம் உண்டா?
கண்டிப்பாக வருத்தம் இருந்தது. அந்த டெக்னாலஜி யாருக்கும் அந்த சமயத்தில் புரியவில்லை. அப்பா கிராபிக்ஸ் இல்லாம நடித்திருக்கலாம் என ரசிகர்கள் விரும்பினார்கள். அனிமேஷனை யாரும் விரும்பவில்லை. அதுதான் பெரிய குறை.

அப்பா, தனுஷ் அடுத்து யாரை வைத்து படம் இயக்க ஆசை?
அஜீத்தை வைத்து படம் இயக்கும் ஆசை உள்ளது.

நீங்கள் உதவி இயக்குனராக இன்னும் கொஞ்சம் கற்றுக் கொள்ளலாம் என ஆசைப்பட்டால் யாரிடம் உதவி இயக்குனராக சேர்வீர்கள்?
ராஜமவுலி, ஷங்கர். இவர்கள் படத்தில் வேலை பார்க்க மிகவும் ஆசையாக உள்ளேன்.

சிறந்த அம்மா, சிறந்த இயக்குனர் எதை விரும்புவீர்கள்?
என் மகன் வளர்ந்து, என் அம்மா நல்ல இயக்குனர் என்று கூறும் அளவிற்கு, சிறந்த அம்மாவாக, சிறந்த இயக்குனராக வேணடும் என்பதே என் ஆசை.

- கவிதா


Advertisement
விஜய், அஜித் படங்களுக்கு சவால் விடும் மகேஷ் பாபு வியாபாரம்விஜய், அஜித் படங்களுக்கு சவால் ... 'பிக் பாஸ்' - நுழையப் போகும் புதிய பிரபலம் யார் ? 'பிக் பாஸ்' - நுழையப் போகும் புதிய ...


வாசகர் கருத்து (3)

K.Sugavanam - Salem,இந்தியா
31 ஜூலை, 2017 - 08:05 Report Abuse
K.Sugavanam அந்தமாதிரி ஆசைக்கெல்லாம் தலை அங்கீகாரம் கொடுக்க மாட்டாரு.. வேணா கோச்சடை part 2 ,3 ,4 இன்னு எடுத்து தள்ளட்டும்..அவங்க அப்பா தங்குவார்..
Rate this:
singaivendan - Singapore,சிங்கப்பூர்
31 ஜூலை, 2017 - 05:54 Report Abuse
singaivendan எங்க தல க்கு கொஞ்சம் வயசாகுது....நீங்க பாட்டுக்கு போட்டு ரொம்ப இயக்கிராதீங்க...கொஞ்சம் பாத்து இயக்குங்க மேடம்?
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
30 ஜூலை, 2017 - 14:56 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஏத்தா.. அந்த மனுஷன் பொண்டாட்டி புள்ளைன்னு ஒழுங்கா இருக்குறது பிடிக்கல்லியா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film maayavan
    • மாயவன்
    • நடிகர் : சந்தீப் கிஷன்
    • நடிகை : லாவண்யா திரிபாதி
    • இயக்குனர் :சி.வி. குமார்
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    Tamil New Film Oru Kathai Sollatuma
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in