ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் அக்ஷை குமார், நடிகை புமி பட்ஜேகர் இணைந்து நடித்துள்ள படம் டாய்லெட் ஏக் பிரேம் கதா. இப்படம் வரும் ஆகஸ்ட் 11 ம் தேதியன்று ரிலீசாக உள்ளது. இதனால் இப்படத்தில் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார் புமி.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய புமி, தான் கருத்து படங்களிலேயே தொடர்ந்து நடிக்க விரும்புவதாகவும், அத்தகைய படங்களே கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெறும் எனவும் கூறினார். பேட்டியில் அவர் கூறுகையில், இப்பொழுதெல்லாம் கருத்து சொல்லும் வகையிலான படங்களே அனைத்து சாதனைகளையும் செய்கின்றன என நினைக்கிறேன்.
கருத்து படங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். அத்தகைய படங்களே வெற்றியும் பெறுகின்றன. இனி வருங்காலத்திலும் இது போன்ற படங்களிலேயே நடிக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.