ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சல்மான் கானின் வாண்டட் படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் புகழ்பெற்றவர் நடிகர் இந்தர் குமார். 1990 களில் புகழ்பெற்ற மாடலாக வலம் வந்த இவர், பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
கில்லாடியான் கா கில்லாடி, அக்னிபாத் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இந்தர் குமார், தற்போது டிவி சீரியல்கள் சிலவற்றிலும் நடித்து வருகிறார். மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வரும் இந்தர் குமாருக்கு இன்று (ஜூலை 28) நள்ளிரவு 2 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
45 வயதாகும் இந்தர் குமாரின் இறுதி சடங்குகள் இன்று மாலை 4 மணிக்கு நடக்க உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்தர் குமாரின் மறைவிற்கு பாலிவுட்டைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.