ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் வேலையில்லா பட்டதாரி. அனிருத் இசையமைத்த அந்த படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அதையடுத்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார் தனுஷ். செளந்தர்யா ரஜினி இயக்க, இந்தி நடிகை கஜோல் வில்லி வேடத்தில் நடித்திருக்கிறார். அப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.
இந்தநிலையில், அடுத்தபடியாக விஐபி-3 படத்தை இயக்கவும் தயாராகி விட்டார் செளந்தர்யா ரஜினி. மேலும், வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டு பாகங்களிலும் இன்ஜினியரிங் படித்த பட்டதாரியாக நடித்துள்ள தனுஷ், அடுத்த பாகத்தில் இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு மாறுகிறாராம்.
அப்படி என்ன வேலை செய்கிறார்? என்று கேட்டால், அடுத்த பாகத்தில் இட்லி வியாபாரம் செய்பவராக நடிக்கிறாராம் தனுஷ். அதாவது, இந்தியாவில் இருந்து இட்லிகளை வெரைட்டியாக தயார் செய்து அவற்றை வெளிநாடுகளுக்கு எக்ஸ்போர்ட் செய்யும் வேடமாம். அந்த வகையில், இந்தியாவில் சாதாரணமாக கருதப்படும் இட்லிக்கு வெளிநாட்டில் எவ்வளவு மவுசு உள்ளது என்பதை விஐபி-3 படம் சொல்கிறதாம்.
மேலும், படித்த பட்டதாரிகள் படிப்புக்கேற்ற வேலைதான் செய்ய வேண்டும் என்று நினைக்காமல் கிடைக்கிற எந்த வேலையையும் செய்து முன்னேறலாம் என்பதையும் அந்த படம் சொல்லப்போகிறதாம்.