அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

கமல்ஹாசனின் அடுத்த படமாக தலைவன் இருக்கிறான் படம் உருவாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கமல்ஹாசன் இயக்குவார் எனத் தெரிகிறது. மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகலாம்.
கமல்ஹாசன் தற்போது விஸ்வரூபம் 2 படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் இருக்கிறார். இந்த வேலைகள் முடிந்ததும் நின்று போன சபாஷ் நாயுடு படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்றும் பேச்சும் உள்ளது. ஆனால், அதற்குள்ளாக தலைவன் இருக்கிறான் படத்தைப் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்கள்.
இப்போதைய அரசியல் சூழ்நிலைகள் தான் இந்தப் படத்தை மீண்டும் ஆரம்பிக்க வைத்துள்ளதோ என்று சந்தேகப்பட வைக்கிறது. சுமார் 7 வருடங்களுக்கு முன்பே கமல்ஹாசன் தலைவன் இருக்கிறான் படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். தமிழ், ஹிந்தியில் படம் தயாராகும் என்று சொல்லப்பட்டது.
ஹிந்தியில் சல்மான் கான் நடிக்கலாம் என்றார்கள். அதன் பின் அந்தப் படம் ஆரம்பமாகவேயில்லை. அடுத்து இரண்டு வருடங்களுக்கு முன்பு மீண்டும் இப்படம் பற்றிய பேச்சுக்கள் வந்தது. சல்மான் கானுக்குப் பதிலாக சைப் அலிகான் நடிக்கலாம் என்றார்கள். ஆனால், அதுவும் பேச்சோடு போனது.
இப்போது மூன்றாவது முறையாக தலைவன் இருக்கிறான் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனேகமாக இப்படம் தற்போதைக்கு தமிழில் மட்டுமே தயாராகலாம் எனத் தெரிகிறது.
கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதால் அவர் வாராவாரம் அதன் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள வேண்டும். மேலும் அவர் தீவிர அரசியலில் இறங்கவும் வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது. அரசியல் நுழைவுக்காகவே அவர் தலைவன் இருக்கிறான் படத்தை ஆரம்பிக்கலாம் என்றும் அடுத்து நிச்சயம் பேசுவார்கள். இவற்றிற்கெல்லாம் கமல்ஹாசனின் பதிலை விரைவில் எதிர்பார்க்கலாம்.