Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவேகம் டீசர், இந்திய அளவில் முதலிடம்

25 ஜூலை, 2017 - 12:22 IST
எழுத்தின் அளவு:
Indias-No-1-teaser-Vivegam

இணையதளத்தையும், தமிழ் சினிமாவையும் பிரிக்கவே முடியாத சூழல் உருவாகிவிட்டது. உலக அளவில் இந்தியப் படங்கள் என்றாலே ஹிந்தி சினிமாதான் என்று சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்து வந்ததை தமிழ் ரசிகர்கள் அவர்களாகவே முறியடித்திருக்கிறார்கள்.
ஹிந்திப் படங்கள் புரியாத பல சாதனையை இணைய உலகில் தமிழ்ப் படங்கள் புரிந்து வருகின்றன. உலகம் முழுவதும் தமிழ்ப் படங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதற்கு தமிழ்த் திரையுலகத்தினருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிக்கும் விவேகம் படத்தின் டீசர் யு டியூபில் அதிக லைக்குகளைப் பெற்று இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

விவேகம் டீசருக்கு இந்த செய்தியை எழுதும் போது 5,03,623 லைக்குகள் கிடைத்துள்ளது. இதன் மூலம் இதுவரை முதலிடத்தில் இருந்த டியூப் லைட் டீசரின் சாதனையை முறியடித்துள்ளது விவேகம் டீசர். டியூப் லைட் டீசருக்கு 5,03,082 லைக்குகள் கிடைத்துள்ளது.

தமிழ்ப் படங்களைப் பொறுத்தவரையில் விவேகம் டீசருக்கு அடுத்து கபாலி டீசர் 4,64,343 லைக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. தெறி டீசர் 3,16,368 லைக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in