ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் அனில் கபூர், முபாரக்கான் என்ற படத்தில் நடித்துள்ளார். ஜூலை 28 ம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தில் அனில் கபூர், அர்ஜூன் கபூர், இலியானா டிசோசா, ஆதித்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இருந்து வரும் அனில் கபூர், தனது சகோதரர் போனி கபூருக்கும் தனக்கும் இடையேயான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அனில் கபூர், எனது தம்பி சஞ்சய் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வார். நான் தான் எப்போதும் கஷ்டப்படுவேன். போனிக்கும் எனக்கும் பல விஷயங்களில் சண்டை வந்து கொண்டே இருக்கும்.
போனி என்னை அடித்துக் கொண்டே இருப்பார். ஆனால் எனது சினிமா வாழ்க்கையில் அவரது பங்கு மிகப் பெரியது. அவர் கடுமையாக உழைக்கக் கூடியவர். நாங்கள் இணைந்து பல சிறப்பான படங்களை கொடுத்துள்ளோம். ரத்தமும், வியர்வையும் சிந்தி, கடுமையாக உழைக்க எங்கள் தந்தையிடம் தான் கற்றுக் கொண்டோம். இப்போது வரை அப்படி தான் இருக்கிறோம். சாகும் வரை அப்படி தான் இப்போம் என்றார்.