ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
களவாணி, கலகலப்பு என பல படங்களில் நாயகியாக நடித்தவர் மலையாள நடிகை ஓவியா. சினிமாவில் ஹோம்லி, கிளாமர் என மாறுபட்ட வேடங்களில் நடித்தும் அவருக்கு பெரிய லிப்ட் கிடைக்கவில்லை, அதனால் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்.
இந்தநிலையில், தற்போது கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அவருக்கு, சினிமாவில் கிடைத்த வரவேற்பை விட இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த வரவேற்பு அதிகம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா பேசும் பல வார்த்தைகளை இணைய தளங்களில் டிரன்டிங் செய்து அவரது மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், ஜெய்-அஞ்சலி நடித்துள்ள பலூன் படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா, ஷட்டப் பண்ணுங்க என்று திட்டுவதற்காக பயன்படுத்திய வார்த்தையை வைத்து புரோமா பாடல் தயார் செய்துள்ளனர். கபாலி புகழ் அருண்ராஜா பாடல் வரிகள் எழுத, அந்த பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.