Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிவின்பாலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் பி.சி.ஸ்ரீராம்

18 ஜூலை, 2017 - 11:54 IST
எழுத்தின் அளவு:
PC-Sriram-cimeatography-to-Nivin-pauly-movie

ஒரு காலத்தில் மணிரத்னம் போன்ற மிகப்பெரிய இயக்குனர்களுடன் மட்டுமே இணைந்து பணியாற்றி வந்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், தற்போது இளைஞர்கள், புதியவர்களுடனும் பணியாற்றத் தொடங்கியிருக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தில் பணியாற்றிய அவர் தப்போது நிவின்பாலி நடிக்கும் தமிழ் படத்திலும் பணியாற்ற ஒப்பந்தமாயிருக்கிறார். பிரியதர்ஷன், சந்தோஷ் சிவன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கிற படம் இது.

24ஏஎம் ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். தலைப்பு இன்னும் வைக்கவில்லை. ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. அனிருத் அல்லது ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பார்கள் என்று தெரிகிறது. இதுகுறித்து இயக்குனர் பிரபு ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

இது ஒரு விறுவிறுப்பான, சுவாரஸ்யமான காதல் படம். பி.சி.ஸ்ரீராம் சார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்புக்கொண்டதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இந்த கதையில் காட்சி அமைப்புக்கு முக்கியத்துவம் இருப்பதால் ஒளிப்பதிவுக்கு பெரிய பங்கு இருக்கிறது. அதற்காகவே பி.சி.ஸ்ரீராம் சாரை பணியாற்ற கேட்டோம். புதியவர்கள் என்று பார்க்காமல் கதையை கேட்டவுடன் பணியாற்ற சம்மதித்தார்.

ஒளிப்பதிவைப்போன்று இப்படத்தில் இசையின் பங்கு பிரதானமாக இருக்கும். அதனால் இசையமைப்பாளர் பற்றிய அறிவிப்பு மிக முக்கியமானதாகவும், பேசப்படும் விஷயமாகவும் இருந்து இப்படத்திற்கு பலம் சேர்க்கும். படத்தின் தயாரிப்பளர் ஆர்.டி.ராஜா தான் இந்த கதையை எழுதியுள்ளார். அவருக்குள் இருக்கும் அருமையான கதாசிரியர் அவருடன் நெருக்கமாக பழகியவர்களுக்கு நன்றாக தெரியும். இளைஞர்களை மிக பெரிய அளவில் கவர்ந்துள்ள நிவின் பாலி இப்படத்திற்கு பெரும் பலமாக இருப்பார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் உறுதிசெய்ய உள்ளோம். வரும் ஜனவரி முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கும். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in