யானை காதில் எறும்பு நுழைந்தால் என்னவாகும் : கமல் | மீண்டும் ஹீரோயினாக ஷாமிலி | 'வர்மா' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம் | செய்தி சேனல்களுக்குத் தடை? - தெலுங்குத் திரையுலகம் அதிரடி | சர்ச்சையைக் கிளப்பிய விஜய் தேவரகொன்டா டுவீட் | மீண்டும் கேரளாவுக்கு வருகிறார் சன்னி லியோன் | பாரபட்சம் காட்டுகிறார்கள் : அபர்ணா பாலமுரளி குமுறல் | பிரேமம் நடிகருக்கு வெளிச்சம் தருமா தொபாமா..? | பாய் பிரண்ட்டுக்கு புருவ அழகியின் பிறந்தநாள் வாழ்த்து | வழக்கறிஞரை அடித்தற்கு சந்தானத்தை பாராட்டும் நெட்டிசன்ஸ்..! |
மோகன்லால்-விஷால் என்கிற வித்தியாசமான காம்பினேஷனில் மலையாளத்தில் உருவாகி வரும் 'வில்லன்' படத்திற்கு, பட அறிவிப்பு வெளியானதில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. விஷால் மட்டுமல்லாமல், ஹன்சிகாவும் இந்தப்படத்தின் மூலம் முதன்முதலாக மலையாளத்தில் நடிப்பதும், அதிலும் இருவரும் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுவதும் அந்த எதிர்பார்ப்பை இருமடங்காக்கி உள்ளது.
இந்தமாத இறுதியில் இந்தப்படம் வெளியாகும் என முன்பு சொல்லப்பட்டிருந்தாலும், படத்தின் வி.எப்.எக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாததால் இதன் ரிலீஸ் தேதியை தன்னால் உறுதியாக கூறமுடியவில்லை என கூறியுள்ளார் படத்தின் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன்.. அதுமட்டுமல்ல இந்தப்படத்தை மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட தீர்மானித்துள்ளதும் ரிலீஸ் தேதியை உறுதியாக அறிவிக்க முடியாததற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.