பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சல்மான் கான் - கபீர் கான் கூட்டணியில் சமீபத்தில் வெளிவந்த படம் "டியூப்லைட்". சல்மான் சற்று வெகுளித்தனமாக நடித்த இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் வரவேற்பு இல்லை. இதனால் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கபீர்கானிடம், டியூப்லைட் தோல்வி குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது... "ஒரு படத்தை மிகவும் ரசித்து, உணர்வுப்பூர்வமாக எடுக்கும்போது, அந்தப்படம் தோல்வியடைந்தால் மிகவும் வருத்தமாக இருக்கும். டியூப்லைட் படத்தின் தோல்வி மனதளவில் பாதித்தது" என்று கூறியுள்ளார்.