யானை காதில் எறும்பு நுழைந்தால் என்னவாகும் : கமல் | மீண்டும் ஹீரோயினாக ஷாமிலி | 'வர்மா' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம் | செய்தி சேனல்களுக்குத் தடை? - தெலுங்குத் திரையுலகம் அதிரடி | சர்ச்சையைக் கிளப்பிய விஜய் தேவரகொன்டா டுவீட் | மீண்டும் கேரளாவுக்கு வருகிறார் சன்னி லியோன் | பாரபட்சம் காட்டுகிறார்கள் : அபர்ணா பாலமுரளி குமுறல் | பிரேமம் நடிகருக்கு வெளிச்சம் தருமா தொபாமா..? | பாய் பிரண்ட்டுக்கு புருவ அழகியின் பிறந்தநாள் வாழ்த்து | வழக்கறிஞரை அடித்தற்கு சந்தானத்தை பாராட்டும் நெட்டிசன்ஸ்..! |
காதலில் விழுந்தேன் படத்தை இயக்கிய பி.வி.பிரசாத், தற்போது இயக்கி, தயாரித்து அவரே நடித்துள்ள உள்ள படம் சகுந்தலாவின் காதலன். அவருக்கு ஜோடியாக தாமிரபரணி பானு நடித்துள்ளார். இவர்கள் தவிர கருணாஸ், சுமன், பசுபதி, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் தான் பிலிம்மில் தயாரான கடைசி படம் என்கிறார் பி.வி.பிரசாத், அவர் மேலும் கூறியதாவது:
காதலில் விழுந்தேன் எப்படி ஜனரஞ்சகமான படமாக வெற்றி பெற்றதோ, அதுமாதிரி சகுந்தலாவின் காதலனும் வெற்றி பெறும். இதில் அத்தனையும் சமமாக கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இசையமைப்பாளர் என்கிற கூடுதல் பொறுப்பையும் நான் ஏற்றிருக்கிறேன். எனக்கும் என் கதாபாத்திர தன்மைக்கும் என்ன மாதிரியான இசை ஒத்து போகுமோ அதை மட்டுமே நான் பயன்படுத்தி இருக்கிறேன். காதலில் விழுந்தேன் படத்தில் நகுல் கதாபாத்திரம் எப்படி பேசப்பட்டதோ அதைப்போல இதில் ஹரி கிருஷ்ணன் என்கிற என் கதாபாத்திரம் வித்தியாசமாக உணரப்படும்.
ஒரே வீட்டில் காந்தியும் ஹிட்லரும் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனைக்கான திரை வடிவமே இந்தப் படம். காந்தி தனது பக்கம் ஹிட்லரை இழுக்க முயற்சிப்பதும் ஹிட்லர் தனது பக்கம் காந்தியை இழுக்க முயற்சிப்பதும் தான் கதை. இதை எந்த அளவுக்கு சுவாரஸ்யமாக சொல்ல முடியுமோ அந்த அளவிற்கு சொல்லி இருக்கிறோம். சொல்ல வந்த இந்த கதையை 5 கோணங்களில் 5 சம்பவங்களில் உள்ளடக்கி சொல்லி உள்ளோம்.
110 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. பிலிமில் தயாரான கடைசி படம் இதுதான் என்று நினைக்கிறேன். 2 லட்சத்து 28 ஆயிரம் அடி படமாக்கப்பட்டுள்ளது. அதில் 75 ஆயிரத்து 600 அடி பிலிமில் எடுக்கப்பட்டுள்ளது. பிலிமில் எடுத்ததையும் டிஜிட்டலுக்கு மாற்றினாலும் கடைசியாக எடுக்கப்பட்ட படம் என்பதால் அந்த பிலிம் சுருளை பத்திரமாக வைத்திருந்து, சினிமா ஆவணக் காப்பகத்திற்கு கொடுக்க இருக்கிறோம். என்றார் பி.வி.பிரசாத்.