காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
விஷால் நடித்த திமிரு படத்தில் மிரட்டல் வில்லியாக நடித்தவர் ஸ்ரேயா ரெட்டி. கடந்த 9 வருடங்களுக்கு முன்பு அந்த படம் வெளியானது. அதன்பிறகு வில்லி என்றாலே ஸ்ரேயா ரெட்டி மாதிரி நடிக்கனும் என்று அவரது நடிப்பை மேற்கோள் காட்டும் அளவுக்கு சிறப்பாக நடித்திருந்தார் ஸ்ரேயா ரெட்டி. ஆனால் பின்னர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்ட ஸ்ரேயா ரெட்டி, தற்போது பிரியதர்ஷன் இயக்கியுள்ள சில சமயங்களில் மற்றும் அண்டாவக்காணோம் ஆகிய படங்களில் மீண்டும் நடித்திருக்கிறார்.
இதில் அண்டாவக் காணோம் படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பைப் பார்த்து இந்த படத்திற்காக ஸ்ரேயா ரெட்டிக்கு தேசிய விருது கிடைக்கும் என்று சொல்கிறார்கள். மேலும், இந்த படத்தில் ஒரு பெரிய அண்டா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. அப்படி நடித்துள்ள அண்டாவுக்கு நடிகர் விஜய்சேதுபதி டப்பிங் கொடுத்திருக்கிறார். அண்டா பேசுவது போல் விஜய்சேதுயின் குரல் படம் முழுக்க பயணித்திருப்பது, அந்த படத்தில் அவரே நடித்திருப்பது போன்ற ஒரு பீலை ஏற்படுத்தியுள்ளதாம்.