Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை விவகாரம்: குற்றவாளியை விட்டுவிட்டு வக்கீலை தண்டிப்பது போல் உள்ளது : கமல்

15 ஜூலை, 2017 - 10:12 IST
எழுத்தின் அளவு:
Kamal-appology-in-kerala-actress-case

கடந்த சில தினங்களுக்கு முன்பு கமல்ஹாசன் தனது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பாவனா கடத்தல், திலீப் கைது விவகாரம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல் "பாவனா கடத்தப்பட்டதும் துன்புறுத்தப்பட்டதும் அநீதி. சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது. கேரள காவல்துறைக்கு என் பாராட்டுகள்" என்றார்.

பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்களின் பெயரை பொது வெளியில் சொல்வது தண்டனைக்குரிய குற்றம். அதனால் கமல், பாவனா பெயரை குறிப்பிட்டது தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய தலைவி லலிதா குமாரமங்கலம், கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் தனது வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணோ அல்லது வேறு யாருமோ கமல் மீது வழக்கு தொடரலாம் என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து கமல் நேற்று தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் கேட்பேன். சட்டத்தை விட உயர்வானவர்கள் யாரும் இல்லை. நான் பெண்களை நேசிப்பவன். அவர்கள் உரிமைக்காக போராடுகிறவன். யாருக்கும் பயப்படுகிறவனும் அல்ல. இது குற்றவாளிகளை விட்டுவிட்டு வக்கீலை தண்டிப்பது போல இருக்கிறது என்று எழுதியுள்ளார்.

Advertisement
மீண்டும் மீண்டும் பரபரப்பை கிளப்பும் எமிமீண்டும் மீண்டும் பரபரப்பை ... சிவாஜி சிலையை மெரீனா கடற்கரையிலேயே வைக்க வழக்கு சிவாஜி சிலையை மெரீனா கடற்கரையிலேயே ...


வாசகர் கருத்து (23)

Muthu Krishnan - Uthamapalayam,இந்தியா
17 ஜூலை, 2017 - 13:06 Report Abuse
Muthu Krishnan ஹாய்
Rate this:
Muthu Krishnan - Uthamapalayam,இந்தியா
17 ஜூலை, 2017 - 13:02 Report Abuse
Muthu Krishnan ஓகே லீவெய்ட் எவ்ளோவோ பிரச்னை இருக்கு தமிழ்நாட்டுல அத பாருங்க எல்லாருக்கும் நெறைய ரெஸ்பான்சிபிலிட்டிஸ் இருக்கு அதெல்லாம் முடிச்சுட்டு அப்பறமா வெட்டி கதை பேசலாம்
Rate this:
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16 ஜூலை, 2017 - 10:05 Report Abuse
Swaminathan Nath இதில் என்ன தவறு, பாவனா என எல்லா செய்திகளிலும் வந்து விட்டது இதில் என்ன ரகசியம்,
Rate this:
arumugam subbiah - Tirunelveli,இந்தியா
15 ஜூலை, 2017 - 20:57 Report Abuse
arumugam subbiah தேசிய மகளிர் ஆணைய தலைவி லலிதா குமாரமங்கலம் அவர்களுக்கு சில கேள்விகள் 1. மது கடையை பொது இடத்தில் திறக்கக்கூடாது என்று போராடிய ஒரு பெண்மணியை உயர் காவல் துறை அதிகாரி பொது இடத்தில் தன் பலம் கொண்ட மட்டும் அடித்து தன் கோழை வீரத்தை கட்டினாரே வலைத்தளம் எங்கும் வளம் வந்ததே அதற்கு குரல் கொடுத்த்தீர்களா? 2. நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற பொது போராட்டங்களில் ONGC எதிராகவும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காகவும் குரல் கொடுத்ததற்காக மாவோயிஸ்ட்டுகள் என்றும், தேச விரோத சக்திகள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்களே அவர்களுக்காக குரல் கொடுத்த்தீர்களா? தயவு செய்து பதவிகளை மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்கு பயன்படுத்துங்கள். சுய விளம்பரத்திற்கு அல்ல.
Rate this:
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
15 ஜூலை, 2017 - 15:44 Report Abuse
JEYAM தமிழன் JEYAM இந்த விஷயத்தில் கமலை ஆதரிக்கிறேன். கமல் தப்பாக ஒன்றும் சொல்லவில்லை, உலகுக்கே தெரிந்த மேட்டரை [செய்தியை] தானே சொன்னார். ஆக குற்றவாளிகளை தண்டிக்காமல், பெயரை சொன்னவர் மீது, வழக்கு பாயும் என்று பீலா விடுவது எரிச்சலை மூட்டுகிறது. [கமலை பொறுத்தவரை இப்போது விளம்பரத்தின் உச்சத்தில் இருக்கிறார். அதனால், அளந்து பேசுவது நல்லது. முன்பெல்லாம் புரியாத மாதிரி பேசுவார், அவர் என்ன சொன்னார் என்பது பலருக்கு புரியாது. ஆனால் இப்போது புரிவது போல பேசுவது தான் என்னவோ, அவருக்கே ஆபத்தாக உள்ளது]
Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Pariyerum perumal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in