Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கணவருடன் கலந்து தான் படங்களில் நடிப்பேன் - ரவீணா டாண்டன்

14 ஜூலை, 2017 - 16:32 IST
எழுத்தின் அளவு:
I-discuss-cine-project-with-my-husband-says-Raveena-Tandon

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பரிட்சயமான நடிகை ரவீணா டாண்டன். தென்னிந்திய படங்களை விட பாலிவுட்டில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். திருமணமான பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதோடு, தான் ஒவ்வொரு படம் கமிட்டாகும் முன்னர் தனது கணவருடன் கலந்து ஆலோசித்து விட்டு தான் நடிக்கிறார். தற்போது அவரது நடிப்பில் ஷாப் என்ற படம் வெளியாகியுள்ளது. இந்தப்படம் பற்றியும், தனது சினிமா பயணம் குறித்தும் நமக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி இதோ...

ஷாப் படத்தில் நடிக்க காரணம் என்ன?
இயக்குநர் ஆனிர் 12 ஆண்டுகளுக்கு முன்னரே ஷாப் படத்தில் நடிக்க என்னை கேட்டார். ஆனால் அந்தசமயம் நான் கர்ப்பமாக இருந்ததால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன்பிறகு ஆனிரும் நிறைய படங்களில் பிஸியாகிவிட்டார். சில ஆண்டுகளுக்கு பிறகு என்னிடம் மீண்டும் இப்படத்தில் நடிக்க கேட்டார். படத்தின் கதையும், என்னுடைய ரோலும் வித்தியாசமாக இருந்ததால் நடித்தேன்.

ஷாப் படத்தில் உங்க ரோல் பற்றி சொல்லுங்க?
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்ணாக சோனல் மோடி என்ற கேரக்டரில் நடிக்கிறேன். தன் வாழ்க்கையில் காதல் என்ற ஒன்றுக்கு இடம் கொடுக்காதவர். உண்மையான காதலுக்காக ஏங்குபவர். வித்தியாசமான ஒரு வேடம், கொஞ்சம் கஷ்டமாகவும் இருந்தது. என்னால் முடிந்தளவு சிறப்பாக நடித்திருக்கிறேன். நிஜ வாழ்க்கையில் நான் சோனல் மோடி போன்ற கேரக்டர் உடையவர் அல்ல.

உங்களின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனை தந்த படம் எது?
சூல் படம் தான் என் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை தந்தது. அந்தப்படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. முஸ்தபா, டாமன், அக்ஸ்... போன்ற அருமையான படங்களில் நடித்தேன்.

நீங்கள் எப்போது படம் தயாரிப்பீர்கள்?
நான் நிச்சயம் படங்கள் தயாரிக்க மாட்டேன். ஏனென்றால் எனக்கு வியாபாரம் நுணுக்கம் தெரியாது. வியாபார விஷயங்கள் எதுவும் தெரியாது. நான் ஏற்கனவே பெச்சான், ஸ்டம்புடு படங்களை தயாரித்தேன். அந்த படங்களால் எனக்கு நஷ்டம் தான் ஏற்பட்டது. ஆகையால் படம் தயாரிப்பதை பற்றி யோசிக்கவில்லை.

படங்களில் நடிக்கும் முன் உங்கள் கணவருடன் ஆலோசனை செய்வீர்களா?
ஆமாம். ஒவ்வொரு படம் கமிட்டாகும் முன்னர், அந்த படம் பற்றியும், அதில் எனது ரோல் பற்றியுள் எனது கணவர் அனிலிடம் ஆலோசனை செய்வேன். சினிமாவை பற்றி அனிலுக்கு நிறைய விஷயங்கள் தெரியும், ஆகையால் இந்தப்படம் எனக்கு சரியாக வரும், வராது என்று அவர் சரியாக சொல்வார்.

இனி எந்த மாதிரி கேரக்டரில் நடிக்க உங்களுக்கு ஆசை?
தற்போது நான் காமெடி படங்களில் நடிக்கவே அதிகம் விரும்புகிறேன். என்னுடைய வயதுக்கு தகுந்தபடி நான் பல வேடங்களில் நடித்துவிட்டேன். ஆகையால் இனி காமெடி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். சில படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது, ஆனால் அது சிறப்பாக இல்லாததால் அதை நிராகரித்துவிட்டேன்.

மீண்டும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் உங்களை சந்திக்கிறேன். நன்றி!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in