மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ரைசா வில்சன். மாடலிங் துறையில் இருந்து வந்துள்ள இவர், செளந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள விஐபி-2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நடிகை கஜோலின் உதவியாளராக அவர் நடித்திருக்கிறார். இது விஐபி-2 படத்தின் டிரைலரிலும் இடம்பெற்றுள்ளது.
இப்படத்தில் நடித்திருந்த போதும் ரைசா யார் என்றே தெரியாமல் இருந்து வந்த நிலையில், இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவர் பிரபலமாகியிருக்கிறார். அதுமட்டுமல்ல தமிழ்நாட்டு ரசிகர்களின் கவனத்திற்கு வந்து விட்ட ரைசாவின் கிளாமர் போட்டோக்களும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.