Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகர்கள் பாசக்காரங்க - சிலிர்க்கும் சிருஷ்டி டாங்கே

09 ஜூலை, 2017 - 16:25 IST
எழுத்தின் அளவு:
Shristi-Tangae-special-interview

மண்ணில் உலவும் வெண்ணிலவு... கன்னக்குழியில் உருகும் வண்ணக் கனவு, அந்தி மாலையில் இளசுகளின் மனதை கிளுகிளுக்க வைக்கும் குல்பி ஐஸ் என தர்மதுரை, மேகா, அச்சமின்றி, சரவணன் இருக்க பயமேன் போன்ற தமிழ் சினிமாக்களில் ஹீரோயின்கள் வரிசையில் இடம் பெற்ற நடிகை சிருஷ்டி டாங்கே தினமலர் வாசகர்களுக்காக ஜாலியான பேட்டி...

* சினிமா வாய்ப்பு?


பிளஸ் 2 வரை படித்துள்ளேன். அப்போதே சினிமா வாய்ப்பு கிடைத்ததால் தொடர்ந்து நடித்து வருகிறேன். சினிமா தேடி வரவில்லை. யதார்த்தமாக அமைந்துவிட்டது.


* ஆசை?


சம்திங் கிரியேட்டீவ்வாக எதையாவது செய்யணும்னு ஆசைங்க. சினிமா வாய்ப்பு இல்லை என்றால் இன்டீரியர் டெக்கரேஷன், பேஷன் டிசைனிங் துறை ரொம்ப பிடிக்கும். அந்தப்பக்கம் போய் இருப்பேன்.


* பிடித்த ஊர்?


சினிமா படங்கள் சூட்டிங்கிற்காக நிறைய இடங்கள் சுற்றி வந்துள்ளேன். இருப்பினும், எனக்கு மிகவும் பிடித்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்தாங்க. அடிக்கடி அங்கே போவேன்.


* ஹீரோ முக்கியத்துவம்?


பழைய படங்களில் ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். தற்போது ஹீரோயின்களுக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். அந்த மாதிரியான சினிமா படங்கள் நிறைய வெளிவருகிறது.


* மகளிருக்கு அட்வைஸ்?


எதைச் செய்தாலும் நல்லா செய்ங்கன்னு சொல்வேன். அட்வைஸ் பண்ற அளவிற்கு நான் ரொம்ப பெரிய ஆள் இல்லை. (சிரிக்கிறார்) நம்புங்க நான் ரொம்ப சின்னப்பொண்ணுங்க.


* பிடிச்சவங்க?


நடிகை ஜோதிகா எனக்கு பிடித்த ஹீரோயின். நான் தல அஜித் தோட ரசிகை. இருந்தாலும் தனுஷ் நடிப்பும் ரொம்ப பிடிக்கும்.


* உங்கள் நடிப்பு...?


இதுவரை பத்து படங்கள் நடித்துள்ளேன். முப்பரிமாணம் படத்தில் வித்தியாசமான வேடம். எனக்கு பிடித்த படம் மட்டுமில்லை, அனைவருக்கும் பிடிக்கும் படமும் இதுதான்.


* சண்டை போடுவீங்களா?


வீட்ல இல்லீங்க. படத்துலனா ஆசை தான். எல்லா கேரக்டர்களும் பண்ணுவேன். குறிப்பாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆசை. ஜோதிகா நடித்த 36 வயதினிலே, தற்போது நடிக்கும் மகளிர் மட்டும் போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையாக இருந்தால் நன்றாக இருக்கும்.


* உங்கள் ரசிகர்களுக்கு?


எங்கே போனாலும் ரசிகர்கள் உற்சாகமாக, அன்புடன் வரவேற்பு தருகின்றனர். தமிழ் ரசிகர்கள் ரொம்ப பாசக்காரங்களா இருக்காங்க. அதை அப்படியே தக்கவைத்துக் கொள்ளணும்னு விரும்புகிறேன்.


தொடர்புக்கு: srushtidange@yahoo.com


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in