ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் பாரதிராஜாவும், கதாசிரியர் ஆர்.செல்வராஜும் நெருங்கிய நண்பர்கள். பாரதிராஜாவின் படங்களின் கதை பெரும்பாலும் செல்வராஜுவுடையதுதான். பாரதிராஜா உதவி இயக்குனராக இருந்தபோது செல்வராஜ் படங்களுக்கு கதை எழுதிக் கொண்டிருந்தார். அவர் சொந்தவீடு என்ற ஒரு கதை எழுதி வைத்திருந்தார்.
ஒரு முறை முத்துராமனுக்கு கதைசொல்லச் சென்ற ஆர்.செல்வராஜ் தான் சொன்ன கதைகளுடன் சொந்தவீடு கதையையும் சொன்னார். அந்த கதை முத்துராமனுக்கு பிடித்திருந்தது. இதில் நான் நடிக்கிறேன். இயக்குனர், ஹீரோயின் முடிவு செய்து விட்டு வாருங்கள் என்றார். அப்போது பாரதிராஜா கே.ஆர்.ஜியின் கம்பெனியில் உதவி இயக்குனராக இருந்தார். கே.ஆர்.ஜிக்கு பாரதிராஜாவை இயக்குனராக்க ஆசை இருந்தது. அந்த நேரத்தில் செல்வராஜ் இந்த கதையை கே.ஆர்.ஜியிடம் சொல்லி ஓகே வாங்கினார். பாரதிராஜா இயக்குவது என்று முடிவானது.
இந்தப் படத்தின் கேரக்டர் முக்கியமானது, உறுதியானது அதில் நடிக்க பொருத்தமானவர் ஜெயலலிதாதான் என்று பாரதிராஜா கருதினார். அதை தயாரிப்பாளரும், நடிகர் முத்துராமனும் ஏற்றுக் கொண்டார்கள். பாரதிராஜாவும், செல்வராஜும் போயஸ்கார்டன் வேதா இல்லத்துக்கு சென்று ஜெயலலிதாவிடம் கதையை கூறினார்கள். அவருக்கும் கதை பிடித்து விட்டது. நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் அப்போது அரசியலுக்குள் நுழைந்த ஜெயலலிதாவால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. படமும் டிராப் ஆகிவிட்டது.
அதே சொந்த வீடு கதையைத்தான் பின்னாளில் புதுமைப்பெண் என்ற பெயரில் இயக்கினார் பாரதிராஜா. அதில் முத்துராமன் நடிக்க இருந்த கேரக்டரில் பாண்டியனும், ஜெயலலிதா நடிக்க இருந்த கேரக்டரில் ரேவதியும் நடித்தார்கள்.