ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவில் நடிக்கத் தொடங்கி பத்து ஆண்டுகளாகி விட்ட நிலையில், இப்போதுவரை காஜல்அகர்வாலின் மார்க்கெட் ஸ்டெடியாக உள்ளது. குறிப்பாக தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகவே தன்னை தக்க வைத்துக்கொண்டு வரும் அவர், தமிழைப் பொறுத்தவரை விஜய், அஜீத் என்று முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறார். அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் கைதி எண் 150 படத்தில் நடித்தவர், இப்போது பவன்கல்யாண், ஜூனியர் என்டிஆர், ராணா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
மேலும், இதற்கு முன்பு பெரும்பாலும் ரொமான்டிக் நாயகியாகவே நடித்துள்ள காஜல்அகர்வால், இப்போது தமிழில் அஜித்துடன் நடிக்கும் விவேகம் படத்திலும், தெலுங்கில் ராணாவுடன் நடிக்கும் நேனே ராஜூ நேனே மந்திரி படத்திலும் மனைவி வேடங்களில் நடித்திருக்கிறார். அதனால் பெரும்பாலும் காதல் மற்றும் பாடல் காட்சிகளில் மட்டுமே வந்து சென்ற காஜல்அகர்வால் இந்த படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளிலும் நடித்திருக்கிறாராம். அவரிடமிருந்து எமோசனலான பர்பாமென்ஸ் வெளிப்பட்டு காஜல்அகர்வாலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் படங்களாக அமைந்துள்ளதாம். இதை தனது நட்பு வட்டாரங்களில் பகிர்ந்து கொண்டு வருகிறார் காஜல்அகர்வால்.