ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மும்பையில் நடந்த காலா படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்று விட்டார் ரஜினி. கடந்த ஆண்டு, தான் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே அவர் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு ஆரோக்கிய சிகிச்சை அளிக்கப்படுவதால் மருத்துவமனை அருகில் உள்ள கெஸ்ட் அவுஸ் ஒன்றில் தங்கியுள்ளார்.
தினமும் காலை, மாலை நேரத்தில் சகஜமாக மக்களோடு மக்களாக நடை பயிற்சி மேற்கொள்கிறார். ஓரிருவர் அடையாளம் கண்டு கொண்டு பேசினால் அவர்களுடன் தாராளமாக பேசுகிறார், போட்டோ எடுத்துக் கொள்கிறார்.
தற்போது ரஜினி செல்பி எடுத்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவில் பெராரி காரில் பயணிக்கும் ரஜினி, டிரைவருக்கு அருகில் அமர்ந்து கொண்டு மொபைல் போனில் செல்பி எடுத்தப்படி பயணிக்கிறார்.
இதேப்போன்று சூதாட்டம் கிளப்பில் அமர்ந்துள்ள ரஜினி, அங்கு சூதாட்டம் விளையாடுவது போன்ற மற்றொரு போட்டோ வெளியாகியுள்ளது.
இவையெல்லாம் பார்க்கும் போது ரஜினி, முழு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது மட்டுமின்றி, குஷியாக இருப்பதும் தெரிய வருகிறது.