ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வெண்ணிலா கபடிக் குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு, அதன் பிறகு சரியான படங்களை தேர்வு செய்யாமல் தொடர்ந்து பின்னடைவை சந்தித்தார். நீர்ப்பறவை, ஜீவா போன்ற நல்ல படங்களில் நடித்தும் கூட அவை ஓடவில்லை.
'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தில் நடித்த பிறகு தன்னுடைய ரூட்டை மாற்றிக் கொண்டார். தனக்கேற்ற கதைகளாகத் தேர்வு செய்து நடிக்க கற்றுக் கொண்டுவிட்டார். அதோடு, குறைந்த பட்ஜெட்டில், லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் படங்களாக தயாரித்தும் வருகிறார் விஷ்ணு விஷால்.
'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படம் மூலம் தயாரிப்பாளராக மாறிய அவரின் முதல் தயாரிப்பே தமிழில் லாபகரமாக அமைந்துவிட்டதால், தற்போது அடுத்தடுத்து படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியானது. தமிழில் வெற்றி பெற்றதைப்போல் தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இது ஒருபக்கமிருக்க, முண்டாசுப்பட்டி' ராம்குமார் இயக்கத்தில் மீண்டும் விஷ்ணு விஷால் நடிக்கும் மின்மினி படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. ''என் கேரியரில் நீண்டநாள் படப்பிடிப்பு நடைபெற்ற படம் இது தான். நிறைய கற்றுக்கொண்டேன்!'' என குறிப்பிட்டிருக்கிறார் விஷ்ணு.
தெலுங்கு ஹிட், மினிமினி ஷூட்டிங் நிறைவு என இரட்டிப்பு சந்தோஷத்திலிருக்கிறார் விஷ்ணு.