சீனாவில் ஐமேக்ஸில் பாகுபலி 2 | எம்.எஸ்.ராஜேஸ்வரியை மறந்த தமிழ்த் திரையுலகம் | 'அர்ஜுன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் | மீண்டும் சமுத்திரகனி இயக்கத்தில் அமலாபால் - நானி | மோகன்லால் தவிர்க்கிறார் : தேசியவிருது இயக்குனர் வருத்தம் | மோகன்லாலின் ஒடியன் படப்பிடிப்பு நிறைவு | 6 ஆண்டுகள் கழித்து பாடிய மம்முட்டி | தமன்னா ஹிந்தி படம், மொத்தமாக ரீ-ஷூட் | மணிரத்னத்திடம் விஜய்சேதுபதி சொன்ன பழையகதை | பாலியல் குற்றச்சாட்டு - உஷா ஜாதவ் பரபரப்பு பேட்டி |
அரபு நாடான அபுதாபியில் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது (சைமா) வழங்கும் விழா இரண்டு நாள் நடந்தது. அபுதாபி சுற்றுலா துறையின் ஆதரவுடன் நடந்த இந்த விழாவில் 2016ம் ஆண்டுக்கான சிறந்த கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாள திரைப்படக் கலைஞர்கள் இந்த விருதுகளை பெற்றனர்.
தமிழ்ப்பட பிரிவில் சிறந்த நடிகையாக நயன்தாரா (இருமுகன்), சிறந்த நடிகராக சிவகார்த்திகேயன் (ரெமோ) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றனர்.
சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது ஏ.ஆர்.ரகுமானுக்கும், சிறந்த பாடகருக்கான விருது அனிருத்துக்கும், சிறந்த பாடலாசிரியருக்கான விருது மதன் கார்க்கிக்கும் வழங்கப்பட்டது.
கொடி படத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லியாக த்ரிஷா தேர்ந்தெடுக்கப்பட்டார், சிறந்த நடிகருக்கான ஜூரி விருது இறுதிச்சுற்று படத்தில் நடித்த மாதவனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான ஜூரி விருது தாரை தப்பட்டை படத்தில் நடித்த வரலட்சுமிக்கு கிடைத்தது.
சிறந்த அறிமுக நடிகை விருதை இறுதிச்சுற்று ரித்திகா சிங் பெற்றார். சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை துருவங்கள் 16 படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் பெற்றார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ராதிகாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
சிறந்த பொழுதுபோக்கு நடிகருக்கான விருது, தெறி படத்தில் நடித்த விஜய்க்கு அறிவிக்கப்பட்டது.
சிறந்த வில்லனாக பிரகாஷ்ராஜும், சிறந்த காமெடியனாக யோகி பாபுவும் தேர்வானார்கள்.