2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

புதியவர்கள் இணைந்து புதுமுமையான முறையில் உருவாக்கி வரும் படம் விண்வெணி பயண குறிப்புகள். இதனை ஒளிப்பதிவு செய்து இயக்கி வருகிறார் ஜெயபிரகாஷ். லெமுரியன் திரைக்களம் என்ற நிறுவனம் சார்பில் ஜெயபிரகாசுடன் இணைந்து யாழ்மொழி, ரா.பாபு சங்கர் ஆகியோர் தயாரிக்கிறார்கள். அத்விக் ஜலந்தர், பூஜா ராமகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், தற்காப்பு கலை வீரர் ஜோகி குமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இதில் ஹீரோ அத்விக் லண்டனில் முதுகலை படித்தவர், கூத்துப்பட்டறையில் நடிப்பு கற்றவர். ஹீரோயின் பூஜா நவீன மேடை நாடக கலைஞர். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் நாட்டுப்ப்புற பாடல்களை ஆய்வு செய்யும் சே.தமிழ் பாடல்களை எழுதுகிறார். சகிஷ்ணா சேவியர் இசை அமைக்கிறார். தெலுங்கான மாநிலத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மதுரையை சுற்றி நடக்கிறது.
செல்வாக்கான ஒரு கிராமத்து இளைஞன் அறிவியல் அறிவை வளர்க்கிறேன், புதிதாக ஒன்றை கண்டுபிடிக்கிறேன் என்று கிராமத்து மக்களை டார்ச்சர் செய்கிறான். ஒரு நாள் விண்வெளிக்கு செல்லும் கலம் ஒன்றை கண்டுபிடித்திருப்பதாக சொல்கிறான். விண்வெளிக்கு வருகிறவர்கள் வரலாம் என்கிறான். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை காமெடியாக சொல்லும் படம்.