ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தற்போது பொதுவாக "எம் மனசு தங்கம்" படத்தில் நடித்து வரும் உதயநிதி, அடுத்ததாக பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது கடந்த வருடம் மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக் ஆகும். அழகான ஒரு சிறிய நகரத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு வித்தியாசமான பழிவாங்கும் கதைதான் இந்தப்படம்.
இந்தப்படத்தில் மலையாளத்தில் அனுஸ்ரீ, அபர்ணா பாலமுரளி என்கிற இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். இதில் அறிமுகமான அபர்ணா பாலமுரளிக்கு முதல் படத்திலேயே பாரட்டுகளும் விருதுகளும் கிடைத்தன. தமிழில் அந்த கேரக்டரில் மலையாள நடிகை நமீதா பிரமோத் நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்தது தான். அதேசமயம் உதயநிதியின் முன்னாள் காதலியாக அனுஸ்ரீ கேரக்டரில் நடிக்க, பார்வதி நாயர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.