ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சில வருடங்களாக தமிழ்ப்படங்களின் சாட்டிலைட் ரைட்ஸ் வாங்குவதில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தது சன் டிவி. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மற்ற சேனல்கள் குறைவான விலைக்குக் கேட்டன. அதனால் பல தயாரித்தவர்கள் முக்கியமாக, பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்தவர்கள் சாட்டிலைட் ரைட்ஸை விற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், 'மெர்சல்' படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தை சன் டிவி நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இன்னொரு பக்கம், இதுவரை நிறுத்தி வைத்திருந்த சாட்டிலைட் ரைட்ஸ் வாங்கும் வேலையையும் தொடங்கிவிட்டது.
'வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் சாட்லைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து பிரபு தேவா நடிப்பில் உருவாகி வரும் 'குலேபகாவலி', நயன்தாரா நடிக்கும் 'அறம்', சந்தானம் நடித்து வரும் 'மன்னவன் வந்தானடி', சிபி சத்யராஜ் நடித்து வரும் 'சத்யா' ஆகிய படங்களின் சாட்லைட் உரிமைகளையும் சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது.
சன் டிவியின் மாற்றம் தயாரிப்பாளர்களை உச்சி குளிர வைத்திருக்கிறது.