ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியத் திரையுலகத்தில் இந்தியாவில் அதிக வசூலைப் பெற்ற படம் என்ற பெருமையப் பெற்ற படம் 'பாகுபலி 2'. ஏப்ரல் மாதம் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளிவந்த இந்தப் படம் நேற்றுடன் இரண்டு மாதங்களைக் கடந்துள்ளது. இப்போது வெளியாகும் படங்கள் ஓரிரு வாரங்கள் ஓடினாலே பெரிய விஷயம் என்று இருக்கும் நிலையில் 'பாகுபலி 2' படம் 60 நாட்களைக் கடந்திருப்பது ஆச்சரியம் தான். இத்தனைக்கும் படத்தின் பெரும்பாலான காட்சிகள் தெலுங்கு உதட்டசைவுகளில் இருந்தாலும், தமிழ் ரசிகர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் படத்தை வெற்றிப் படமாக்கிவிட்டனர்.
60 நாட்களுக்குப் பிறகும் இன்னும் தமிழ்நாட்டில் சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் மட்டும் இப்படம் சுமார் 130 கோடி ரூபாய் அளவிற்கு வசூலித்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. கடந்த சில வாரங்களாக 'பாகுபலி 2' படத்தின் வசூலைப் பற்றி சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் கூட எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. 50வது நாளில் 1050 தியேட்டர்களில் 'பாகுபலி 2' இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது என்று சொன்னார்கள்.
தமிழ்நாட்டில் இந்த வாரம் நிறைய படங்கள் வருவதால் 'பாகுபலி 2' ஓரிரு தியேட்டர்களைத் தவிர அனேகமாக மற்ற தியேட்டர்களிலிருந்தும் எடுக்கப்பட்டுவிடும் எனத் தெரிகிறது.