ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'விவேகம்' படத்தின் 'சர்வைவா' பாடல் கடந்த வாரம் சாவன் இசை இணையதளம், யு டியூப் ஆகியவற்றில் வெளியிடப்பட்டது. வெறும் ஆடியோ மட்டும் சாவன் இசை இணையதளத்தில் வெளியானது. அந்தப் பாடலை மட்டும் மிகக் குறைந்த நேரத்தில் 10 லட்சம் பேர் கேட்டு ரசித்துள்ளனர். அதற்காக அந்த இணையதளத்தை நடத்தும் சோனி மியுசிக் நிறுவனம் அனிருத்துக்கு சிறப்பு சான்று ஒன்றை அளித்து கௌரவப்படுத்தியுள்ளது.
இணைய உலகம் வளர்ந்த பிறகு டிரைலர், டீசர், பாடல்கள் ஆகியவற்றை வெளியிட யு டியூப் இணையதளத்தை ஒரு நல்ல தளமாக திரையுலகினர் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ஃபேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றிலும் வீடியோக்கள் வரை பதிவிட ஆரம்பித்தார்கள். தற்போது ஃபேஸ்புக்கில் பதிவிடப்படும் வீடியோக்களின் சாதனையும் டிஜிட்டல் தள சாதனையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
அஜித், விஜய் போன்ற நட்சத்திரங்களின் படங்களால் சம்பந்தப்பட்டவர்கள் அவர்களது தளங்களுக்கு நல்ல விளம்பரங்களையும் தேடிக் கொள்கிறார்கள். யு டியூபில் 'சர்வைவா' பாடல் 33 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. சாவன் இசை இணையதளத்தில் தொடர்ந்து டாப் 15 பாடல்களில் முதலிடத்தில் உள்ளது.