ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராகுல் பீரித் சிங். தமிழை விட தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் அடுத்தப்படியாக பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்க உள்ளார். இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்கும் "அய்யாரி" என்ற படத்தில் ராகுல் பீரித் சிங் நடிக்கிறார். சித்தார்த் மல்கோத்ரா மற்றும் மனோஜ் பாஜ்பாய் முக்கிய ரோலில் நடிக்க, சித்தார்த் ஜோடியாக ராகுல் பீரித் சிங் நடிக்க இருக்கிறார். படத்தில் ராகுல், ஐடி., பெண்ணாகவும், அவரை காதலிக்கும் ராணுவ அதிகாரியாக சித்தார்த்தும் நடிக்க உள்ளார்
பாலிவுட்டில் நடிப்பது பற்றி ராகுல் பீரித் சிங் கூறியிருப்பதாவது... "பாலிவுட்டில் நடிப்பது உண்மை தான். ஆனால் இதை நானும் கூற முடியாது. தயாரிப்பாளர் முறைப்படி அறிவிப்பார்" என்கிறார்.
திரில்லர் படமாக உருவாக உள்ள "அய்யாரி" படம் 2018-ம் ஆண்டு ஜன., 25-ம் தேதி ரிலீஸாக உள்ளது.