ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கட்சித் தொடங்குவது குறித்து தீவிர ஆலோசனையில் இருக்கும் ரஜினி, இன்று அல்லது நாளை மும்பைப் புறப்பட்டுச் செல்கிறார். தான் நடித்துக் கொண்டிருக்கும் காலா பட சூட்டிங்கில் ஒரு வார காலம் கலந்து கொள்ளும் ரஜினி, மும்பையில் வைத்து, யாரையும் சந்திப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறார்.
காலா படப்பிடிப்பு முடித்த கையோடு, இம்மாத இறுதியில், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்கு செல்கிறார். அங்கு, பத்து நாட்கள் வரை தங்கும் ரஜினி, தனது உடலை முழுவதுமாக பரிசோதனை செய்து கொள்ள இருக்கிறார் இருக்கிறார். தொடர்ந்து அங்கு ஓய்வெடுக்கும் ரஜினி, அங்கிருந்தபடியே புது கட்சித் தொடர்பாக, அங்கிருக்கும் சில நண்பர்களை சந்தித்துப் பேச தீர்மானித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து முடித்திருக்கும் ரஜினி, அமெரிக்காவில் இருந்து அடுத்த மாதம் 10ம் தேதி தமிழகம் திரும்பி, புதுக்கட்சி துவங்கும் பணியில் தீவிரமாக இறங்கவும் முடிவெடுத்திருக்கிறார்.
புதுக்கட்சி துவங்குவதற்கு முன், தமிழகத்தின் பல நகரங்களுக்கும் சென்று, மக்களை சந்தித்து பேசவும் திட்டமிட்டிருக்கிறார்.