மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
படையப்பா, பாபா, சண்டக்கோழி, சிவகாசி, சிவாஜி, கத்தி உள்பட பல படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைன் செய்தவர் செளந்தர்யா ரஜினி. அதையடுத்து கோவா படத்தில் தயாரிப்பாளரான அவர், தனது தந்தை ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தை இயக்கினார். தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகமான வேலையில்லா பட்டதாரி-2 படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் ஜூலை 28-ந்தேதி திரைக்கு வருகிறது.
முதல்பாகத்தில் நடித்த அதே கலைஞர்கள் மீண்டும் நடிக்க, இந்தி நடிகை கஜோல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதையடுத்து, வருகிற ஜூன் 25-ந்தேதி இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியாக இருக்கிறது. இந்த தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் தனுஷ்.