ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தவர் மாளவிகா மேனன். விழா படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்தப் படம் தோல்வி அடைந்ததால் மாளவிகாவுக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்து ஹீரோயினாக நடித்த சில படங்கள் வெளிவரவில்லை.
இந்தநிலையில் மீண்டும் ஹீரோயின் ஆகியிருக்கிறார் மாளவிகா மேனன். சிலந்தி ஆதிராஜன் இயக்கும் அருவா சண்ட படத்தில் கபடி வீரர் ராஜாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இது கபடி விளையாட்டு பின்னணியில் சொல்லப்படும் கவுரவ கொலை சம்பந்தப்பட்ட படம். ஒயிட் ஸ்கிரீன் சார்பில் வி.ராஜா தயாரிக்கிறார், தரண் இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். படத்தில் நடிப்பது பற்றி மாளவிகா மேனன் கூறியதாவது:
அருவாசண்டை படத்தின் கதையை கேட்டதும் அசந்துவிட்டேன். குறிப்பாக இயக்குனர் கிளைமாக்ஸ் காட்சியை விவரித்த போது என்னை அறியாமல் கண் கலங்கிவிட்டேன். இந்த படம் தமிழ் திரையுலகில் எனக்கு ஒரு வலுவான அஸ்திவாரத்தை அமைத்து தரும். பெரிய ஹீரோயின்களுக்கு அமைவது போல எனக்கான அறிமுக பாடல் காட்சியும் இருப்பதால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த படத்திற்கு பிறகு தமிழில் நான் பிஸியான நாயகியாக ஆகிவிடுவேன். என்கிறார் மாளவிகா மேனன்.