ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக கடந்த ஆண்டு நயன்தாரா நடித்து வெளியான படம் புதிய நியமம். ஏ.கே.சஜன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஒரு வெயிட்டான வேடத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. இதில் சிறப்பாக நடித்தமைக்காக அவருக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது.
இந்த படத்தை நயன்தாராவை முன்னிறுத்தி தற்போது தெலுங்கில் வாசுகி என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடும் வேலைகள் நடக்கிறது. நயன்தாராவுக்கென்று தெலுங்கில் ஒரு பெரிய ரசிகர் வட்டம் இருப்பதால் இந்த வாசுகி படத்தை அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.