Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்பு படத்துக்கு கிடைத்த பெருமை

20 ஜூன், 2017 - 17:26 IST
எழுத்தின் அளவு:
Simbus-AAA-releasing-more-no-of-theatres

சிம்பு நடித்த படங்கள் குறிப்பிட்ட தேதியில் வெளியாவதே ஆச்சர்யம். அந்த ஆச்சரயத்தை நிகழ்த்திக்காட்டி இருக்கிறது மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம். இந்தப் படம் ஜூன் 23-ம் தேதி வெளியாகிறது.


ஏற்கனவே வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டாலும் சிம்பு படம் என்பதால் பலரும் நம்பிக்கையில்லாமல் தான் இருந்தனர். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை விரட்டி வேலை வாங்கி படத்தை ரெடி பண்ண வைத்துவிட்டார் மைக்கேல் ராயப்பன். படம் ரெடியான கையோடு தணிக்கைக்கு அனுப்பி சான்றிதழும் பெற்றுவிட்டார்.


அடுத்த கட்டமாக, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்கு தியேட்டர்களை புக் பண்ணும் பணிகளையும் முடுக்கிவிட்டார். ஏஏஏ படத்துக்கு தமிழ்நாட்டில் மட்டும் 450க்கும் மேற்பட்ட தியேட்டர்களை புக் பண்ணிவிட்டார்களாம். கேரளாவில் 75 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 50 தியேட்டர்களிலும், வட இந்தியாவில் 50 தியேட்டர்களிலும் ஏஏஏ படம் வெளியாக உள்ளது.


வெளிநாடுகளில் 350க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது. இவற்றில் இலங்கையில் மட்டுமே 40க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது. தற்போதைய தகவலின்படி, உலகம் முழுக்க ஏறக்குறைய 1000 தியேட்டர்களில் வெளியாவதன் மூலம் சிம்பு நடித்த படங்களிலேயே அதிக எண்ணிக்கையில் வெளியாகும் படம் என்ற பெருமையும் ஏஏஏ படத்துக்குக் கிடைத்திருக்கிறது.


Advertisement
8 விதமான வேடத்தில் அசத்தும் விஜய் சேதுபதி8 விதமான வேடத்தில் அசத்தும் விஜய் ... விவசாயிகளின் கடனை ரத்து செய்யுங்க... முதல்வருக்கு விஷால் கடிதம் விவசாயிகளின் கடனை ரத்து செய்யுங்க... ...


வாசகர் கருத்து (2)

அன்பு - தஞ்சை,இந்தியா
21 ஜூன், 2017 - 00:59 Report Abuse
அன்பு எந்த படமும் ஓடாதபோதே, சிம்பு பண்ற சிலும்பை தாங்கி கொள்ள முடியல.
Rate this:
Senthil - Karur,இந்தியா
20 ஜூன், 2017 - 18:01 Report Abuse
Senthil மீண்டு வரும் சிம்பு, மீண்டும் மீண்டும் வருக
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devil Night Dawn of the Nain Rouge
    Tamil New Film Oru Kathai Sollatuma
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in