ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த வாரம் வெளியான படம் உரு. இந்தப் படத்தை வையம் மீடியாஸ் பட நிறுவனத்தின் சார்பில் வி.பி.விஜி என்ற புதிய தயாரிப்பாளர் தயாரித்துள்ளார். திருப்பூரைச் சேர்ந்த இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர். உரு படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். சாய் தன்க்ஷிகா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில் மைம் கோபி, டேனியல் ஆனி, தமிழ்ச்செல்வி, கார்த்திகா உள்பட பலரும் நடித்துள்ளனர்.
விக்கி ஆனந்த் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். உரு படத்துடன் கடந்த வாரம் மரகதநாணயம் படமும் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே ஹாரர் படங்கள் தான். ஒரேநாளில் இரண்டு ஹாரர் படங்கள் வெளியாகி இருப்பதால் இரண்டில் ஒரு படம் மட்டுமே ரசிகர்களின் சாய்ஸாக இருக்கும்.
இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, உரு படத்தின் போஸ்டர்கள் மீது மரகத நாணயம் போஸ்டர்களை ஒட்டிவிட்டனராம். அதாவது அதேநாளில் வெளியாகும் உரு படத்தை உருத் தெரியாமல் ஆக்கிவிட்டனராம். எனவே உரு படத்திற்கு கூட்டம் வரவில்லையாம்.
எங்கெல்லாம் உரு படத்தின் மீது மரகத நாணயம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன என்பதை வீடியோ மட்டும் போட்டோ எடுத்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுக்க உள்ளாராம் உரு படத்தின் தயாரிப்பாளர் விஜி.