Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க விரும்பும் சஞ்சய் தத்

20 ஜூன், 2017 - 11:48 IST
எழுத்தின் அளவு:
Sanjay-Dutt-wants-to-work-with-Aishwarya-Rai-Bachchan-in-Film-Malang

சிறை வாசத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருக்கும் நடிகர் சஞ்சய் தத், தற்போது "பூமி" என்ற படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குநர் ஆரம்ப் சிங் இயக்கும், "மலாங்" என்ற படத்தில் சஞ்சய் நடிக்க உள்ளார். சஞ்சய் தனக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வேண்டும் இயக்குநரிடம் சொல்ல, தற்போது அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.


இதுகுறித்து இயக்குநர் ஆரம்ப் கூறியிருப்பதாவது... "சஞ்சய் தன்னுடன் ஐஸ்வர்யா நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஏற்கனவே இவர்கள் இணைந்து நடித்த சாப்த் படத்தில் இருவரின் கெமிஸ்ட்ரி அவ்வளவு அருமையாக இருந்தது. அதேஅளவு கெமிஸ்ட்ரியை இப்போது மீண்டும் ரசிகர்களிடத்தில் கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். சஞ்சய் தத் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான காதல் படத்தில் நடிக்க உள்ளார், நிச்சயம் அது ரசிகர்களுக்கு பிடிக்கும்" என்றார்.


மலாங் படத்தின் முதன்மை நாயகி, சிபிஐ., அதிகாரியாக நடிக்க, அவரை காதலிப்பவராக சஞ்சய் தத் நடிக்க உள்ளார். முற்றிலும் ஒரு வித்தியாசமான ரொமான்ட்டிக் திரில்லர் படமாக மலாங் உருவாக உள்ளது. மலாங் படத்தை பூஷண் குமார், சந்தீப் குமார் மற்றும் ஓமங் குமார் இணைந்து தயாரிக்க உள்ளார்கள். டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.


Advertisement
பிரபல போஜ்புரி நடிகை தூக்கிட்டு தற்கொலைபிரபல போஜ்புரி நடிகை தூக்கிட்டு ... முபாராக்கான் மற்றுமொரு போஸ்டர் வெளியீடு முபாராக்கான் மற்றுமொரு போஸ்டர் ...


வாசகர் கருத்து (1)

VELAN S - Chennai,இந்தியா
20 ஜூன், 2017 - 14:11 Report Abuse
VELAN S அடுத்தவன் பொண்டாட்டி கூடயே நடிக்கணும்னு பார்க்கிறயே , உன் பொண்டாட்டி கூட நடிக்கணும்னு ஆசைப்படு , இல்லாட்டா , உன் பொண்டாட்டி கூட நடிக்க வேற எவனாவது ஆசைப்படுவான் ,அப்ப என்ன செய்வ ,சினிமாகாரங்க விளங்காத பயலுக ,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Puyala Kilambi Varom
    Tamil New Film vanamagan
    • வனமகன்
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Anbanavan Asaradhavan Adangadhavan
    Tamil New Film Server Sundaram
    • சர்வர் சுந்தரம்
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : வைபவி சாண்டில்யா
    • இயக்குனர் :ஆனந்த் பால்கி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in