ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் சிறுத்தை சிவா-அஜித் கூட்டணி வீரம் படத்தில் அதிர்ஷ்டவசமாக கிளிக் ஆனாலும் ஆனது, சிவாவுக்கு வேறு நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பே தராமல் தனது பட வாய்ப்புகளையே தரும் அளவுக்கு அவரை தனது ஆஸ்தான இயக்குனர் ஆக்கிவிட்டார் அஜித். அது மட்டுமல்ல படத்தின் டைட்டிலில் இடம்பெற்ற 'வி' சென்டிமென்ட்டையும் கெட்டியாக பிடித்துக்கொண்டு அவர்கள் கூட்டணியில் உருவான இரண்டாவது படத்திற்கு 'வேதாளம்' என்றும் தற்போது இயக்கி வரும் மூன்றாவது படத்திற்கு 'விவேகம்' என்றும் டைட்டில் வைத்துள்ளதாகத்தான் இதுவரை சொல்லப்பட்டு வருகிறது..
'வி' சென்டிமென்ட் வேண்டுமானால் ஒகே.. ஆனால் விவேகம் என டைட்டில் வைத்ததற்கு காரணம் அந்தப்படத்தில் அஜித்துக்கு இணையாக முக்கியமான வில்லன் வேடத்தில் நடித்து வரும் விவேக் ஓபராய் தான் காரணமாம். இந்தப்படத்தின் கதையை விவேக் ஒபராயிடம் சொல்வதற்காக சென்ற சிவா, கதையை சொல்லி ஓரளவு அவரை திருப்தியும் படுத்திவிட்டாராம்.. ஆனாலும் கொஞ்சம் யோசனையுடன் இருந்த விவேக்கிடம், இந்தப்படத்தின் டைட்டிலிலேயே உங்க பெயர் வரும்படி தான் (விவேகம்-விவேக் ஓபராய்) வைத்துள்ளேன்.. காரணம் நீங்கள் தான் இதில் நடிக்க வேண்டும் என்பதால் தான் என அடுத்த அஸ்திரத்தை வீசினாராம் சிவா. உடனே மறுபேச்சு பேசாமல் இந்தப்படத்தில் நடிக்க சம்மதித்து விட்டாராம் விவேக் ஓபராய்.. இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் விவேக் ஒபராயே சொல்லியிருக்கிறாராம்.