சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
இயக்குனர் பிரபுசாலமன் மைனா மூலம் அமலாபால், கும்கி மூலம் லட்சுமிமேனன், கயல் மூலம் ஆனந்தி என தொடர்ச்சியாக புதிய ஹீரோயின்களை கொண்டு வந்தார். அவர்களும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் அடுத்து இயக்க இருக்கும் கும்கி இரண்டாம் பாகத்திற்கு ஹீரோயின் கிடைக்கவில்லை தொடர்ந்து விடாமல் தேடிக் கொண்டிருக்கிறார்.
இதில் டாக்டர் ராஜசேகர்&ஜீவிதா தம்பதிகளின் மகள் ஷிவானி நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் அவர் ஒப்பந்தமாகவில்லை என்ற படத்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கிறது. கிராமிய முகம் கொண்ட பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறார் பிரபு சாலமன்.
மைனா, கும்கி படங்கள் வெற்றிக்கு பிறகு பிரபு சாலமன் இயக்கிய கயல், தொடரி என இரண்டு படங்களும் மக்களிடம் வரவேற்பு பெறாதால் கும்கி 2ம் பாகத்தை வெற்றிப்படாக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது. இதற்காக ஒவ்வொன்றையும் கவனமாக செய்கிறார். படத்திற்கான ஸ்கிரிப்ட் பக்காவாக ரெடியாகிவிட்டது. தாய்லாந்து காடுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று லொக்கேஷன்களையும் முடிவு செய்துவிட்டார். பிரபு சாலமன் படங்களில் காட்சிகள் பிரமாண்டமாக இருக்கும். அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்து முடித்து விட்டார். நாயகன் நாயகி கிடைத்ததும் படப்பிடிப்பிடிப்புக்கு கிளம்புகிறார்.