மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சல்மான் கான் - கபூர் கான் கூட்டணியில் உருவாகியுள்ள டியூப்லைட் படம் வருகிற ஜூன் 23-ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஆகையால் படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் சல்மான். இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான நிலவும் சுமூகமற்ற சூழ்நிலையால் டியூப்லைட் படம் பாகிஸ்தானில் ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து சல்மானின் தயாரிப்பு நிறுவனத்தின் மூத்த அதிகாரி அமர் கூறியிருப்பதாவது... "டியூப்லைட் படம் கண்டிப்பாக பாகிஸ்தானில் ரிலீஸாகும். ஆனால் அதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை. பாகிஸ்தானில் சல்மானுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். அவரது பஜ்ரங்கி பைஜான் படத்திற்கு நல்ல வரவறே்பு கிடைத்தது. அதேப்போல் டியூப்லைட் படமும் அங்கு ரிலீஸ் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேசமயம் நாங்கள் நாட்டின் சட்ட-திட்டங்களை மதிக்கிறோம், அதற்கு உட்பட்டு படத்தை ரிலீஸ் செய்வோம்" என்று கூறியுள்ளார்.