ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியான படம் 'பாகுபலி 2'. உலகம் முழுவதும் சுமார் 8000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியானதாகச் சொல்லப்பட்டது. வசூலில் பல சாதனைகளைப் புரிந்த இந்தப் படம் 1076 தியேட்டர்களில் 50வது நாளைக் கடந்திருக்கிறது.
தொடர்ந்து 1051 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆந்திரா, தெலுங்கானாவில் 282 தியேட்டர்களிலும், தமிழ்நாட்டில் 120, கேரளாவில் 102, கர்நாடகாவில் 58 தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 25 தியேட்டர்களிலும் படம் தொடர்கிறது.
சுமார் 1700 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ள இந்தப் படம் சீனா மற்றும் மேலும் பல வெளிநாடுகளில் வெளியாகும் போது 2000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 300 கோடி ரூபாய் செலவில் இரண்டு பாகங்களும் தயாராகி வெளியாகி 2500 கோடி ரூபாய் வரை வசூலைக் கொடுத்திருக்கிறது.
இத்திரைப்படத்தில் நடித்த பலருக்கும் இந்தப் படம் நல்ல பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்திருக்கிறது. படத்தை இயக்கிய ராஜமௌலி இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் முதன்மையானவர் என பாராட்டப்பட்டு வருகிறார்.