ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கத்தில் 96 என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இருவரும் இணையும் முதல் படம் இது. 96 படத்தை மெட்ராஸ் எண்டடெயின்மெண்ட் நந்தகோபால் தயாரித்து வருகிறார்.
96 என்ற தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே என்ன அர்த்தம் என்று கேட்டால், படக்குழுவினர் மௌனம் காத்தனர். சஸ்பென்ஸாம். ஆனால் 96 படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி தனது கதாபாத்திரம் குறித்து சொல்லும்போது டைட்டில் ரகசியத்தை உடைத்துவிட்டார்.
அதாவது, 1996-ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த ஒரே வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பற்றிய கதையாம். அதை குறிக்கும் வகையில்தான் படத்திற்கு 96 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம்.
விஜய்சேதுபதிக்கு தற்போது 39 வயதாகிறது. த்ரிஷாவுக்கு 34 வயதாகிறது. இந்த வயதில் ப்ளஸ்டூ படிக்கும் மாணவன் மாணவியாக நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?