ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தில் இடம்பெற்ற பாடல் 'ஆளுமா டோலுமா'. இந்தப்பாடலுக்கு அர்த்தமே புரியாவிட்டாலும் அனிருத் இசையில் உருவான அந்த பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் கலக்கியது. அஜித் ரசிகர்களின் முக்கிய விருப்ப பாடல் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. அப்பாடலின் ஹிட்டு தான் அடுத்தபடியாக அஜித் நடித்து வரும் விவேகம் படத்திற்கும் அனிருத் இசையமைக்க முக்கிய காரணமாகியது.
அப்படி அஜித் ரசிகர்களுக்கு மிக பிடித்தமான அந்த 'ஆளுமா டோலுமா' பாடல் தற்போது ஆங்கிலத்தில் வெளியாக உள்ளது. அந்த பாடலை ஆங்கிலத்தில் எழுதி பாடி வெளியிடுகிறார் இங்கிலாந்து பாடகர் இன்னோ கெங்கா. இவர் ஒரு பாப் இசை பாடகர். யு-டியூப்பின் பிரபலமான இவர், இதற்கு முன்பு பல பாப் பாடல்கள் மற்றும் ஆல்பங்களை வெளியிட்டு யுடியூப் ரசிகர்களின் பிரியத்தை பெற்றவர். இவர் அஜித்தின் வேதாளம் பட பாடலை ஆங்கிலத்தில் பாடி வெளியிடும் தகவல் வெளியானதில் இருந்து அஜித் ரசிகர்கள் செம உற்சாகமடைந்துள்ளனர்.