ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகின் மிகப் பெரும் சூப்பர் ஹிட் படங்களுள் ஒன்று 'சிவாஜி'. ரஜினிகாந்த், ஸ்ரேயா, விவேக், சுமன் மற்றும் பலர் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், ஷங்கர் இயக்கத்தில் 2007ம் ஆண்டு ஜுன் மாதம் 15ம் தேதி இப்படம் வெளியானது.
ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணியில் வெளிவந்த இந்த முதல் படம், தமிழ்த் திரையுலகத்தின் முந்தைய சாதனைகள் பலவற்றையும் முறியடித்து மிகப் பெரும் வசூலை அள்ளியது. ஏவிஎம் நிறுவனத் தயாரிப்பில் சுமார் 60 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் 120 கோடி வரை வசூல் செய்தது.
ரஜினிகாந்தின் அசத்தலான நடிப்பு, ஸ்ரேயாவின் அசர வைக்கும் அழகு, ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து கூட்டணியில் இனிமையான பாடல்கள், கே.வி. ஆனந்தின் அழகான ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் பிரம்மாண்டமான அரங்குகள் என படத்தின் அனைத்து விஷயங்களும் ஆகா, ஓகோவென அமைந்து ரசிகர்களைக் கவர்ந்தது.
ஒரு முழுமையான என்டர்டெயின்மென்ட் படமாக இருந்தாலும் சமூகப் பார்வையுடன் கல்வி வியாபாரத்தைப் பற்றி கருத்து சொன்ன படமாக அமைந்தது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் இப்படம் நல்ல வசூலைப் பெற்றது. இந்தப்படம் வெளிவந்து இன்றுடன் 10 ஆண்டுகளாகிவிட்டது.
சிவாஜி படத்தின் மாபெரும் வெற்றி மீண்டும் ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணியை 'எந்திரன்' படத்தில் இணைத்து தற்போது '2.0' படத்திலும் மீண்டும் இணைத்துள்ளது.
'சிவாஜி தி பாஸ்' என்ற கேப்ஷனுடன் வந்த 'சிவாஜி' தமிழ்த் திரையுலகத்தில் ஒரு முக்கியமான படம்.